Feeds:
Posts
Comments

Archive for August, 2009

என் தாத்தா தோண்டிய போது
தங்கம் கிடைத்தது.
என் அப்பா தோண்டிய போது
தண்ணீர் கிடைத்தது.
நான் தோண்டிய போது
கண்ணிவெடிகள் கிடைத்தது.
என் பிள்ளைகள் தோண்டும் போது
பிணங்கள் கிடைக்கும்.
– ஈழ கவிஞன்.

ஆக எல்லாம் முடிந்தாயிற்று.கிட்டத்தட்ட அறுபதாயிரம் மக்களை கொன்று புதைத்ததை உலகம் satellite புகைப்படம் வழி பார்த்து செத்தவர்கள் எண்ணிக்கையை மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டிருக்கிறது.

செத்தவர்கள் காய்ச்சல் வந்து செத்தார்கள் என்கிறார் இலங்கை அதிபர் இல்லை இல்லை அவர்கள் சளி பிடித்து செத்தார்கள் என்கிறது என் இந்திய தேசம்.

இனத்தின் பெயரால்..மதத்தின் பெயரால் …உலகின் ஏதோ மூலையில் எப்போதுமே படுகொலைகள் நடந்துவருகின்றது.அதுவும் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றது.

இது அத்தனையும் என் பக்கத்துக்கு ஊரில் நடக்கும் போதுதான் எனக்கே உரைக்கின்றது.

எனது புலம்பல்கலோ ..கோபமோ எந்த மயிரையும் புடுங்காது என தெரியும்.இருந்தாலும் இந்த எழவு வீட்டில் எனக்கும் வெடித்து கிளம்புகிறது அழுகை. ரத்தமும் சதையுமான மனிதர்களை கொடூரமாக கொன்று..அதை விட கொடுரமாய் உறவுகளை பறித்து சிறையிட்டு…

இந்த போரை நடத்தியது இலங்கை அதிபரின் தேச பற்று அல்ல..அவருடைய பதவி பற்று.
சோனியாவின் கோபமல்ல.அவரொன்றும் தமிழ் படத்து கதாநயகி அல்ல .ஹீரோ செத்ததுக்கு பழிவாங்கும் அளவுக்கு அவருக்கொன்றும் ராஜிவ்-மேல் அவ்வளவு காதலும் இருந்திருக்க வாய்ப்பில்லை.இந்தியாவில் இருந்து நடத்தியதெல்லாம் இந்திய கொளுத்த முதலாளிகள். ஈராக் போரை எப்படி அமெரிக்க தொழிலதிபர்கள் நடத்தினார்களோ அப்படியே ஈழப்போரை இந்திய ……. நடத்தினார்கள்.

மீள் கட்டுமான பணி சொன்னபடி ……..
Satellite monitoring நம்ப பர்ணலோவோட தம்பி கம்பெனி…
வீடு இல்லa ஊரில் செல்போன் டவர் எ கட்டிக்கிட்டு இருக்கிறது
சாட்சாத் நம்ப தமிழின தலைவரோட பேரனின் பினாமிகள் தான்.

நல்லா இருங்க என் இந்திய தேசிய மக்களே..
சீன தோழனே…பாகிஸ்தான் நண்பனே..நல்லா இருங்க.
எம் வீடு எழவுக்கு வந்துபோன ..பான்கீமூன் நல்லா இருங்க.
எழவுக்கு வரமுடியலினாலும் துக்கம் தெரிவிச்ச ஒபாமா நல்லா இருங்க.
உரிமைபோரை தீவிரவாதமா காட்டும்படி செஞ்ச ஒசாமா நல்லா இரு.

கடிதமெழுதி கையொடிந்த கருணாநிதி நல்லா இருங்க.
பொணத்த வெச்சு பதவி வாங்குன எல்லாரும்
பொணத்த வெச்சு ஒட்டு வாங்க பார்த்த எல்லாரும்
நல்லா இருங்க.

விளையாடியபடியே குண்டுவீச்சில் செத்துப்போன
சிறுமியின் கையில் இருந்த
தேவதை உங்களை ஆசிர்வதிக்க.

—-

Read Full Post »

முடிவிலியாய் தொடரும்..
வாழ்வின் மீதான
காதல்..

—-

Read Full Post »

பிரிவின் பெரும் வலியொன்று
என்னை இவ்வுலகத்தில் இருந்து
தனியனாய் ஆக்குகிறது.

அவ் வலியின் வேதனை..
கோபமாய் தெரிக்கின்றது
எதிர்படும் ஒவ் ஒருவர் மீதும்.

எவ்வித சலனங்களையும்
உண்டாக்க வில்லை
சாலையில் காண நேர்ந்த விபத்தும்
நகரும் பேருந்தில் கையசைக்கும் குழந்தையும்.

Read Full Post »